பதிவு செய்த நாள்
15
நவ
2024
10:11
தேனி; போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று பணி சன்னதியில் வீற்றிருக்கும் சிவனுக்கு அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
16 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சிவ நாம முழங்க அன்னாபிஷேக அலங்காரத்தில் வீட்டிற்கும் சிவனை தரிசித்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலைத்துறை நிர்வாகம் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இன்று ஐப்பசி மாதம் பௌர்ணமி அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு ஆலயப் பிரகாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. காசி விஸ்வநாதருக்கு பஞ்சகவியம் ,சந்தனாதித் தைலம் ., திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம் பன்னீர் சந்தனம் விபூதி போன்ற 16 வகை வாசனாதி திரவியங்கள் மூலம் சிவனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. லிங்கத் திருமே னியாய் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதருக்கு முழுக்க முழுக்க சூடான அன்னத்தினாலும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து லட்சதீபம் பஞ்சதீபம் போன்ற தீபங்கள் ஏற்றி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அண்ணா அபிஷேக அலங்காரத்தில் வீட்டிற்கும் சிவனை தரிசித்துச் சென்றனர். அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.