பதிவு செய்த நாள்
15
நவ
2024
12:11
சோறுகண்ட இடம் சொர்க்கம்” என ஒரு பழமொழி உண்டு. அதற்குப் பலர் பல விதமான அர்த்தங்களைக் கூறுவர். ஆனால் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? சிவன் கோயில்களில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தைக் காண்பவருக்கு சொர்க்கம் என்பதே சிறந்தது. சரியும் கூட. ஒவ்வொரு அரிசியும் லிங்கம்போல இருப்பதால் அத்தனை கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்யமும் நமக்கு உண்டு. ஆக அவ்வளவு உயர்ந்தது அன்னாபிஷேகம்.
உடுமலை; உடுமலை பகுதிகளிலுள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி மாதம், பவுர்ணமி தினத்தன்று, அன்னாபிஷேக விழா நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள, காசி விஸ்வநாதருக்கு, அன்னம் மற்றும் பல்வேறு காய்கறிகளால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதே போல், முத்தையா பிள்ளை லே – அவுட் சோழீஸ்வரர் கோவிலில், சிவபெருமானுக்கு, பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.