மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஐப்பசி மாத பவுர்ணமி விழா மற்றும் அன்னாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடந்தது. மக்கள் சுபிட்ஷமுடன் வாழ, ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு, காய்கற்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின், மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.