பதிவு செய்த நாள்
15
நவ
2024
05:11
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அன்னபிஷேகமும், பாலதிரிபுரசுந்தரி அம்மனுக்கு, பால் அபிஷேகமும் நடந்தது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில், சுக்கு காபி கடை அருகே உள்ள காந்தி நகரில், ஸ்ரீ மஹா சித்தர் பீடம் உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர், பால திரிபுரசுந்தரி, போகர், தன்வந்திரி பெருமாள், அகத்தியர், விநாயகர், முருகர் ஆகிய சுவாமிகளின் சிலைகள் உள்ளன. ஐப்பசி மாதம் நிறைவே முன்னிட்டு, இன்று பீடத்தில் உள்ள வைத்தீஸ்வரருக்கு அன்னபிஷேகமும், காய்கறிகளில் அலங்காரமும் செய்து பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து பால திரிபுரசுந்தரி அம்மனின் பாதத்துக்கு பால் அபிஷேகம் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் சுவாமி மீது சாத்தி இருந்த அன்னம், காய்கறிகள் ஆகியவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.