Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... பிறந்தது கார்த்திகை.. மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் பிறந்தது கார்த்திகை.. மாலை அணிந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2,625 கிலோ அரிசியில் சாதத்தால் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
2,625 கிலோ அரிசியில் சாதத்தால் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 நவ
2024
06:11

அரியலுார்; கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 2,625 கிலோ அரிசியில் சாதம் சமைத்து, அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது. 


அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோயில் உலக பிரசித்திபெற்றது, புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுககிணறு, ஒரேகல்லிலில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில்  உலக அளவில் வியக்க கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும்.இவ்வாறு சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். 


இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேகம் இன்று நடந்தது. இதற்காக, 75 கிலோ எடை உள்ள 35 மூட்டை என 2,625 கிலோ அரிசியால், மெகா சைஸ் குக்கரில் சாதம் சமைக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு மூங்கில் கூடைகளில் நிரப்பி, 109 சிவாச்சாரிகள் வரிசையில் நின்றவாறு அன்னத்தை சுமந்து சென்று லிங்கத்தின்மேல் சாத்தினர். பின்னர், மலர்கள், காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாலை 6 மணியளவில் மஹாதீபாராதனை நடந்தது.  லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறும். இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதால் திரளான பக்தர்கள் பங்கேற்று, லிங்கத்தின்மேல் சாத்தப்பட்ட அன்னத்தை பிரசாதமாக பெற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, 13ம் தேதி கணக்கவிநாயகருக்கு மகாபிஷேகமும், 14ம் தேதி திருவிளக்கு பூஜை, பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. நாளை 16ம் தேதி மூலவருக்கு ருத்ராபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்திருந்தனர். நேற்று மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar