நத்தம் கைலாசநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2024 05:11
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா நடந்தது. இதையொட்டி மூலவர் கைலாசநாதர்- செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.முன்னதாக உலக நன்மை வேண்டி கோவில் வளாகத்தில் தாமரை வடிவில் காலையில் 108 சங்குகளும், மாலையில் 1008 சங்குகளும் அமைக்கப்பட்டு அதில் வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 108 மூலிகைகளால் ஆன பொருட்கள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.பின்னர் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.