பதிவு செய்த நாள்
19
நவ
2024
10:11
பழநி; பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப்காரில் பராமரிப்பு பணியில் பெட்டிகளில் எடைக்காக கான்கிரீட் கற்கள் வைத்து சோதனை நடைபெற்று வருகின்றன.
பழநி கோயில் சென்று வர, ரோப் கார் மூன்று நிமிடத்தில் பயன்பட்டு வந்தது. கடந்த அக்.,7, முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ரோப்காரின் கம்பி வட சக்கரங்கள், பேரிங்குகள், ரப்பர் புஷ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. மேல் தளத்தில் உள்ள ரோப் கார் இயந்திரத்தில் புதிய சாப்ட், 730மீ நீளமுடைய வடக்கயிறு (ரோப்) மாற்றப்பட்டது. மேலும் இயந்திரத்தின் உறுதி தன்மையும் சோதனை செய்யப்பட்டது. நவ.,16ல் பெட்டிகள் சரி செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. எடையில்லாமல் ரோப்கார் இயக்கி சோதனை செய்யப்பட்டது. நேற்று காங்கிரீட் கற்களால் ஆன எடைகள் ஏற்றப்பட்டது ஒரு பெட்டிக்கு 300 கிலோ விதம் எட்டு பெட்டிகளுக்கு 2,400 கிலோ எடை ஏற்றப்பட்டு ரோப் கார் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இன்று பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்து, அறிக்கை தரப்பட்ட பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.