பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில், விசாலாட்சி அம்பிகா சமேத, சந்திரசேகர சுவாமி கோயிலில், கார்த்திகை தீப திருநாளில், சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. இரவு 8க்கு தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை எரிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர், முருகன் கோயில்களில் விளக்கேற்றப்பட்டன.
மகா நாகதீபம்: நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், மாலை 6.30க்கு, சந்தியாவந்தன மகாமண்டபத்தின் மீது, மகாநாக தீபம் ஏற்றப்பட்டது. மூன்று நாட்கள், எரியும் வகையில், 10க்கும் மேற்பட்ட டின்களில், 150 கிலோ நெய், நல்லெண்ணெய் ஊற்றப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர். ராமநாதபுரம் சொக்கநாதர் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.