மேலூர்: மேலூர் அருகே கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, விவசாயம் செழிக்க இறைவனை வேண்டி, ஒவ்வொருவரும் கைப்பிடி மண்ணை எடுத்து வீசியதில், மண் மலை உருவானது. மேலூர் நரசிங்கம்பட்டியில் பெருமாள் மலை உள்ளது. இங்குள்ள முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில் திருக்கார்த்திகை வழிபாடு நடந்தது. அருகிலுள்ள ஓடையிலிருந்து கைகளால் எடுத்து வரப்பட்ட மணலை பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசி வழிபாடு செய்தனர். மணலை வீசினால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீசப்பட்ட கைப்பிடி மண், மலையாக மாறியது. இரவு பெருமாள் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. இவ்விழாவை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.மேலவளவு அருகில் கருப்புக்கோயிலில் கற்களை வீசி வழிபடுவது வழக்கம். மலை மீது ஏறும் பக்தர்கள் அங்கிருந்து கீழ்நோக்கி கற்களை எறிவர். செங்குத்தான மலை மீது ஏறி சதங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். ஆட்டுக்குளம் பெருமாள் மலையில் நேற்று பகல் முழுவதும் வழிபாடு நடத்தப்பட்டது. இரவில் பெரியகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. உலகநாதபுரத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.