திருவிழா துவக்கமாக டிச. 4 மாலை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். டிச. 5 காலை 8:30 மணிக்கு மேல் 9:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். திருவிழா நடக்கும் டிச. 13 வரை சுவாமி, தெய்வானை தினம் காலையில் தங்கச் சப்பரம், விடையாத்தி சப்பரம், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். முக்கிய நிகழ்ச்சிகளாக டிச. 10ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, டிச.12ல் பட்டாபிஷேகம், டிச.13 காலை சிறிய வைரத் தேரோட்டம், மாலையில் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, டிச. 14ல் தீர்க்க உற்ஸவம் நடைபெறும். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா செய்து வருகின்றனர்.