காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சொர்ணமுகி நதியில் ஆரத்தி நிகழ்ச்சியை கோயில் அர்ச்சகர்கள் வெகுவிமரிசையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ. பொஜ்ஜல. சுதிர் ரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாலை ஏழு மணிக்கு அன்னை சொர்ணமுகி நதிக்கு கோயில் அர்ச்சகர்கள் கலச பூஜை, தூப, தீபம், மகாதீப பூஜைகள் செய்தனர். பக்தர்கள் நதி ஆரத்தியை தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. காளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி நதியில் கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற நதி ஆரத்தி நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.