பரமக்குடி; பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் பைரவருக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பைரவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பக சஷ்டி விழா நடக்கிறது. நேற்று முதல் நாள் விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடந்து, அபிஷேகம் முடிந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பைரவர் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சகஸ்ர நாம அர்ச்சனை நிறைவடைந்து விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தினமும் பச்சை, சிவப்பு சாத்தி அலங்காரங்களும், வெண்ணை, சந்தன காப்பு மற்றும் பாவாடை நெய்வேத்தியம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் செய்துள்ளனர்.