மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2024 03:12
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி டிச. 1 ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து புனித நீரைக்கொண்டு சொக்கநாதருக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.