பதிவு செய்த நாள்
02
டிச
2024
03:12
கோவை; கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, கோவை மதுக்கரை லட்சுமி நாராயணா கோவிலில் நடந்த படிபூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலில், கார்த்திகை மாதம் முதல் தேதி சிறப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், தினமும் மாலை 7:30 மணி முதல் 8:30 வரை பஜனை மற்றும் நட்சத்திர பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கின்றன. இங்கு நடந்த படிபூஜையில், இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள், திரளாக பங்கேற்றனர். இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 27, 28, 29ம் தேதிகளில், 73ம் ஆண்டு ஐயப்பன் விளக்கு திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் கணபதி ஹோமம், சுதர்சன பூஜை, லட்சார்ச்சனை, உச்ச பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கார்த்திகை மாத சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என, கோவில் விழாக்குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.