ராணிப்பேட்டை; சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஜார் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சோழபுரீஸ்வரர் கோவிலில் மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு மூலவர் சோழபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலசம் மற்றும் 108 சங்கில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை, பூர்ணாஹீதி நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் கலசம் மற்றும் 108 சங்கு எடுத்து சென்று கோவில் வலம் வந்தனர். தொடர்ந்து மூலவர் சோழபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் நெய் விளக்கு மாவிளக்கு, தேங்காய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.