திருப்பரங்குன்றம் கோயில்களில் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது.
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மலைக்கு பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி அபிஷேகம் நடந்தது. கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சுந்தரேஸ்வரருக்கு 108 சங்க அபிஷேகம், பூஜையும், ஹார்விபட்டி சந்திராபாளையம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆதி சொக்கநாதருக்கு 108 சங்காபிஷேகம் முடிந்து மரகத லிங்க அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.