பதிவு செய்த நாள்
06
டிச
2024
04:12
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தபோவனம் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் 51ம் ஆண்டு ஆராதனை விழாவில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது.
கால கணக்குகளுக்கு அடங்காத நீண்ட நெடுவாழ்வு வாழ்ந்த மகான் ஞானானந்தகிரி சுவாமிகள். இவரது அதிஷ்டானம் திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில் அமைந்துள்ளது. சுவாமிகளின் 51 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை ஸ்ரீ வித்யா கடஸ்தாபனம், நவாவரண பூஜை, அதிர்ஷ்டானத்தில் லட்சார்ச்சனை துவங்கியது. டாக்டர் ரங்கன்ஜியின் உபன்யாசம் நடைபெற்றது. வரும் 10ம் தேதி வரை தினசரி மாலை 3:00 மணியிலிருந்து 5:00 மணி வரையும், இரவு 7:00 மணியிலிருந்து, 9:00 மணி வரையும் உபன்யாசம் நடக்கிறது. ஆராதனை தினமான 16ம் தேதி காலை 5:30 மணிக்கு பாத பூஜை, அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அலங்காரம், லட்சார்சனை நிறைவு, மதியம் 1:00 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.