கமுதி; கமுதி மதுரை ரோடு எட்டுக்கண் பாலம் அருகே அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது.வராஹி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது.பங்கேற்ற பெண்கள் வாழை இலையில் பச்சரிசி வைத்து, தேங்காய் உடைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில் கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி பகுதியில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.