பதிவு செய்த நாள்
07
டிச
2024
12:12
திற்பரப்பு, கலிங்கராஜபுரம் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவிலில் புதிதாக பிர திஷ்டை செய்ய உள்ள கொடிமரத்திற்கான தைலாதிவாசம் நடந்தது. வைக்கல்லூர் அருகே கலிங்கராஜபுரத்தில் பழமையான ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து தண்டான் சமுதாய 3 சாரிட்டபின் டிரஸ்ட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்ய கடந்த மே மாதம் கேரள மாநிலம் பாலா சுடப் பாட்டூர் பகுதியில் இருந்து தேக்கு மரம் கொண்டு வரப்பட்டது.
சபரிமலை ஐயப்பன், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் களில் கொடிமரம் தயார் செய்த பத்தியூர் வினோத் பாபு தலைமையிலான குழு 43 அடி உயரத்தில் கோவிலில் பிரதிஷ்டை செய்யும் விதமாக கொடிமரத்தை வடிவமைத்தனர். கொடிமரம் நீண்ட காலம் உறுதி தன்மையோடு நிற்க கொடி மரத்தை மூலிகை எண்ணெயில் ஊறவைக்கும் தைலாதிவாசம் செய்வது வழக்கம். இதற்காக கோவில் வளாகத்தில் வைத்து மூலிகை சாறுகளுடன் வினோத் பாபு குழுவினர் எண்ணெய் தயார் செய்தனர். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட் ட தோணியில் கொடி மரத்தை தைலாதிவாசம் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவில் தந்திரி சங்கர பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடிமர சிற்பி வினோத் பாபு முன்னிலையில் கொடி மரம் வைக்கப்பட்ட தோணியில் கோவில் நிர்வாகிகளும், பக் தர்களும் எண்ணெய் சமர்ப்பித்தனர். நிகழ்ச்சியில், தலக்குளம் அம்பா ஆஸ்ரமம் சுவாமி மஹா மண்டலேஸ்வர் சூரிய வன்ஷி அகடா, கோவில் டிரஸ்ட் தலைவர் உதய குமார் செயலாளர் சுனில் குமார், பொருளாளர் மணி, உறுப்பினர்கள் என். மோகனன், எஸ். மோகனன், ராதாகிருஷ்ணன், ஷாலு, ரஜிதா, ராதாமணி, கிருஷ்ண வேணி, தன்யா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.