பதிவு செய்த நாள்
07
டிச
2024
01:12
திக்கணங்கோடு, பருத்திக்காட்டுவிளை ஸ்ரீமன் கண்ணப்பச்சி கோவிலில் 10 நாள் வருஷாபிஷேகம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று (6ம் தேதி) துவங்கியது. விழா நாட்களில், காலை கணபதி ஹோமம், உஷ பூஜை, எதுர்த்து பூஜை, அகண்ட நாம ஜெபம், 2 மதியம் அலங்காரம், உச்சபூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை பஜனை, தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை, ஸ்ரீபூதபலி, தொடர்ந்து சமய மாநாடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில், நேற்று காலை பிரதீப் போற்றி திருக்கொடி ஏற்றி வருஷாபிஷேக பூஜை நடத்தினார். இன்று இரவு மெல்லிசை நடக்கிறது. நாளை இரவு விளையாட்டுப் போட்டிகள், 5ம் நாள் காலை 108 பொங்கல் வழிபாடு, 7ம் நாள் பகல் கண்ணப்பச்சி சுவாமிக்கு பெரிய படுக்கை பூஜை, இரவு மேள தாளத்துடன் நேர்ச்சை எடுத்து வருதல், 8ம் நாள் இரவு 1008 திருவிளக்கு பூஜை, 2ம் நாள் இரவு பள்ளி வேட்டை நடக்கிறது. விழா நிறைவு நாள் (15ம் தேதி) காலை பஞ்சவாத்தியம் முழங்க கண்ணப்பச்சி சுவாமி தேர் மீதும், மஹா விஷ்ணு யானை மீதும் உலா வருதல் நடக்கிறது. கோவில் சன்னதியில் இருந்து புறப்படும் ஊர்வலம் கோழிப் போர்விளை, அமராவதி, முகமாத்தூர் சென்று நங்ஙச்சிவிளை, பூக்கடை, புங்கறை வழியாக பகல் கோவில் வந் தடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகள் ஊர் வைகுண்ட தலைவர் ராஜன், செயலாளர் ராஜன், பொருளாளர் சரவண ராஜ், துணைத்தலைவர் அகிலேஷ், செயலாளர் ஜெய்னீஷ் விழாக்குழு தலைவர் ஸ்ரீனிவாச பிரபு, பொரு ளாளர் சுபாஷ், செய லாளர் நிபின், துணை செயலாளர் ஆனந்த், துணைத்தலைவர் ரங்கீஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.