சீர்காழி கோவிலில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் சுக்கிரவார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2024 12:12
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவிலில் நடந்த சுக்கிரவார பூஜைகள் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர் முதல் தேவார பதிகம் அருளிய ஸ்தலமான இங்கு சிவபெருமான் 3 நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அஷ்ட பைரவர்கள் தனி சன்னதி கொண்டுள்ளதால் காசிக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. இங்கு வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜையும், அஷ்டமி அன்று நடைபெறும் அஷ்டபைரவர்கள் பூஜையும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. சுக்கிரவார பூஜையில் கலந்து கொண்டு சட்டை நாதரை வழிபட்டால் சாவ, பாவ, தோஷங்கள் நீங்குவதுடன், வழக்குகளில் இருந்து விடுபடுவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு நடந்த சுக்கிர வார பூஜையில் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி. வேலுமணி கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனது மகனின் திருமண அழைப்பிதழை பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் மற்றும் திருநிலை நாயகி அம்பாள் சன்னதிகளில் வைத்து வழிபாடு நடத்தினார்.