பதிவு செய்த நாள்
09
டிச
2024
10:12
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து ஆண்டாள் திருப்பாவை பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை கிஞ்சித்காரம் தர்ம ஸம்ஸ்தாபனம் அமைப்பின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசிக்கும் ஆன்மீக சுற்றுலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கு மேற்பட்ட பக்தர்கள் நேற்று காலை 9:00 மணிக்கு ஆண்டாள் கோயிலில் குவிந்தனர். கோயிலில் ஆண்டாள், பெரியபெருமாள், பெரியாழ்வார், மணவாள மாமுனிகள் சன்னதியில் திருப்பாவை பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர். பின் ஆடிப்பூர பந்தலில் நடந்த நிகழ்ச்சியில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஆன்மீக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினர். பின்னர் ஊர்வலமாக ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்திற்கு சென்று பார்வையிட்டனர். திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.