ஜெனக நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 10:12
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் எப்போது துவங்கும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
5ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் 2003ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால் 20 ஆண்டுகளைக் கடந்தும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. திருப்பணிகள் நடக்காததால் கோயிலில் பல இடங்களில் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன. மூலஸ்தான கோபுரத்தை சுற்றி அரச மரம் உள்ளிட்டவை வளர்ந்துள்ளன. கருங்கற்களான சுவர்கள் பராமரிக்கப்படாமல் பாதித்து வருகிறது. மேற்புறத்தில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்து, செடிகள் வளர்ந்துள்ளன. கோயில் கருங்கற்களில் பழமையான வட்ட எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பழமை மாறாமல் திருப்பணிகளை துவங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். செயல் அலுவலர் சுதா கூறுகையில், ‘‘2022-–23ல் அனுப்பிய திட்ட மதிப்பீடு, தற்போது மறு மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் விரைவில் திருப்பணிகள் துவங்கும்’’ என்றார்.