108 வைணவ திவ்ய தேசம் தரிசனம்; உ.பி., இளைஞர் சைக்கிள் பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 10:12
கமுதி; உ.பி., மாநிலம் கோரக்பூர் குஷி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயத்தன்னா கிருஷ்ணா ஜூலை 4 ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களை தரிசனம் செய்வதற்காக சைக்கிள் பயணம் புறப்பட்டார். நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு அருகே சைக்கிளில் வந்தவர் அங்கிருந்து 44வது திவ்ய தேசமான திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு சென்றார். கோட்டைமேட்டில் ஜெயத்தன்னா கிருஷ்ணாவை பொதுமக்கள் வரவேற்று தேவையான உதவிகளையும் செய்தனர். சைக்கிளில் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளுடன் ஜெயத்தன்னா கிருஷ்ணா பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது தமிழகத்தில் உள்ள 84 திவ்ய தேசங்களில் 74ல் தரிசனம் செய்துள்ளார். கடைசியாக நேபாள நாட்டில் நிறைவு செய்ய உள்ளதாக ஜெயத்தன்னா கிருஷ்ணா தெரிவித்தார்.