மானாமதுரை சீரடி சாய் பாபா கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 02:12
மானாமதுரை; மானாமதுரை ரயில்வே காலனி பாபா பள்ளி வளாகத்தில் உள்ள நலம் தரும் சீரடி சாய் பாபா கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், இளநீர், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு 108 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சகர் நாகமணி தலைமையில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டடு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. பின்பு நாராயண சேவை, அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனர் ராஜேஸ்வரி, தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி மற்றும் சாய் பாபா பக்தர்கள் செய்திருந்தனர்.