தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், தியானலிங்கத்தை தரிசித்த மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், 120 பேர் கோவை ஈஷா யோகா மையம் வந்தனர். ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி ஆகிய சன்னதியில், தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஈஷா யோகா மையம் சார்பில், இலவச யோகா வகுப்பு நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளி பாஸ்கர் கூறுகையில், நம்மைப் போன்றவர்களால் தியானலிங்கத்தை பார்க்க முடியாதா என்று, பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால், ஈஷாவில் எங்களை அழைத்து சென்ற விதமும், அங்குள்ள ஆன்மிக பணியாளர்களின் தூய்மையான அன்பும், மிகவும் சிறப்பானதாக இருந்தது. எவ்வித சிரமமும் இல்லாமல் கோவிலின் அனைத்து இடங்களையும், எங்களுக்கு சுற்றிக்காட்டினர்,என்றார்.