Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீபதிருவிழா; ... பல்லடத்தில் உலக நலனுக்காக மகா ருத்ர பூஜை பல்லடத்தில் உலக நலனுக்காக மகா ருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன், பெருமாள் கோயில்களில் டிச.16ல் மார்கழி மகா உற்சவம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
சிவன், பெருமாள் கோயில்களில் டிச.16ல் மார்கழி மகா உற்சவம் ஆரம்பம்

பதிவு செய்த நாள்

11 டிச
2024
05:12

பரமக்குடி; பரமக்குடியில் சிவன் மற்றும் பெருமாள் உட்பட அனைத்து கோயில்களிலும் டிச.16 முதல் மார்கழி மகா உற்சவம் துவங்குகிறது.


மாதங்களிலேயே சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த வகையில் மார்கழி மாதம் முழுவதும் கடவுளை வழிபடும் மாதமாக உள்ளதால் தேவர்களின் மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு டிச.16ல் மார்கழி 1 துவங்குகிறது. அப்போது பெருமாள் கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை, சிவன் கோயில்களில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படும். தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் திருப்பள்ளி எழுச்சி உட்பட பல்லாண்டு பாடி காலை 4:00 மணி தொடங்கி 6:00 மணிக்குள் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். இதனை ஒட்டி பக்தர்கள் திரளாக காலையில் எழுந்து தரிசனம் செய்வதுடன், பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி வலம் வருவர். மேலும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படி அருளிய அஷ்டமி சப்பரம் டிச.23, அனுமன் ஜெயந்தி டிச.30ல் கொண்டாடப்பட உள்ளது. பரமபத வாசல் திறப்பு அனைத்து பெருமாள் கோயில்களிலும் 2025 ஜன.10 அன்று வைகுண்ட ஏகாதசி விழாவாக கொண்டாடப்படும். ஜன.11 துவாதசி விழாவும், ஆண்டாள், பெருமாள் சேர்க்கையாகிய கூடாரவல்லி உற்சவம் நடக்க உள்ளது. தொடர்ந்து ஜன.13 அதிகாலை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மார்கழி உற்சவத்தின் நிறைவு நாளாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar