திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவ விழாவில், நேற்று உற்சவர் முருகன் வள்ளி – தெய்வானையுடன் அன்ன வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த வருடமும் கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோத்சவம் நேற்று உற்சவம் முருகன் வள்ளி - தெய்வானையுடன் அன்ன வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் இரவு நேரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.