திருவண்ணாமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; சிக்கி தவித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 03:12
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப தரிசனம் செய்ய வழங்கப்பட்ட கட்டளைதாரர், உபயத்தாரர் அனுமதி அட்டைக்கு நுழைவாயிலில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் சிக்கி தவித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (13ம் தேதி) அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவையொட்டி கோவிலில் தீப தரிசனம் செய்ய வழங்கப்பட்ட கட்டளைதாரர், உபயத்தாரர் அனுமதி அட்டைக்கு நுழைவாயிலில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் சிக்கி தவித்தனர். தீப திருவிழாவுக்கு நகர நாட்டுக்கோட்டை நகரத்தாரை அனுமதிக்காததால் அவர்கள் அம்மணி அம்மனுக்கு கோபுரம் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.