சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மார்கழி மாத பிறப்பு கோ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2024 02:12
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவிலில் இன்று மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மாடு, கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கினர். அதனை அடுத்து பிரம்மபுரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் அமைந்துள்ள காட்சி கொடுத்த நாயகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேவார பதிகங்கள் பாடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.