காளஹஸ்தி சிவன் கோயிலில் மார்கழி சிறப்பு வழிபாடு; சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2024 10:12
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம்: பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் (தனுர் ) மார்கழி மாதத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஆண்டாள் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீப தூப வழிப்பாடுகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க மேள தாளங்களுடன் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான துணை செயல் அதிகாரி லோகேஷ் ரெட்டி, கோயில் ஆய்வாளர் ஹரிபாபு யாதவ் மற்றும் கோயில் அலுவலர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.