ஸ்ரீரங்கத்தில் மார்கழி 2ம் நாள் வழிபாடு; பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2024 11:12
ஸ்ரீரங்கம்; மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு, பஜனை துவங்கியுள்ளது. வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சிறப்பாக துவங்கிய பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று பரமபத நாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில், வையத்து வாழ்வீர்காள் என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் பெருமாள் பாற்கடல் துயின்ற பரமன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.