Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் தரிசன வரிசையை ... தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு யாக்கரை அய்ப்பன் கோவிலில் அயப்பன் விளக்கு மகோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலக்காடு யாக்கரை அய்ப்பன் கோவிலில் அயப்பன் விளக்கு மகோற்சவம்

பதிவு செய்த நாள்

20 டிச
2024
11:12

பாலக்காடு; பாலக்காடு மேற்கு யாக்கரை அய்ப்பன் கோவிலில் அயப்பன் விளக்கு மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.


கேரள மாநிலம் பாலக்காடு மேற்கு யாக்கரை மகாவிஷ்ணு கோவில் அருகே உள்ளது அய்ப்பன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் அயப்பன் விளக்கு மகோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு மகோற்சவம் நேற்று காலை 5:30 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. 7:30 மணிக்கு நிறமாலை, உஷ பூஜை ஆகியவை நடந்தன. இதையடுத்து பல்லாவூர் ஸ்ரீதரன் மாரார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு கொண்ட பஞ்சாரி மேளம் முழங்க மூன்று யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்வு நடந்தது. 11:00 மணிக்கு சிறப்பு பூஜை, நவகம், பஞ்சகவ்யம், உச்சபூஜை ஆகியவை நடந்தன. மதியம் 12:00 மணிக்கு அணிவகுப்பில் கலந்து கொண்ட யானைகளுக்கு உணவளிக்கும் நிகழ்வு நடந்தது. 5:00 மணிக்கு பஞ்சாரி மேளம் மற்றும் மேளதாளங்கள் முழங்க மூன்று யானைகள் அணிவகுப்புடன் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 6:00 மணிக்கு சுற்று விளக்கேற்றி பக்தர்கள் வழிபடும் நிகழ்ச்சி நடந்தன. இதையடுத்து மூலவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. 9:00 மணிக்கு மண்டல பூஜை, சாஸ்தாம் பாட்டு ஆகியவை நடந்தன. இன்று நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar