பதிவு செய்த நாள்
29
நவ
2012
11:11
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருகார்த்திகையை முன்னிட்டு, பக்தர்களால் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
முதலுதவி மையம் அமைக்கப்படுமா: சபரிமலை சீசனையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, மருத்துவ, முதலுதவி மையங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோயிலுக்கு, வயதானவர்கள் அதிகம் வருகின்றனர். சித்திரை வீதியில் நடந்து வரும் போது, சிலர் மயங்கி விழுகின்றனர். இரு நாட்களுக்கு முன்கூட, வடக்கு சித்திரை வீதியில், பெண் ஒருவர் மயங்கி விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டது. ஆஸ்திரியா நாட்டுக்காரர் எக்மார்ட் மேயர், 73, கோயிலுக்கு வந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், "108 ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்தார். கடந்த மாதம், கூடலழகர் பெருமாள் கோயிலில், தீபம் ஏற்றும்போது, சேலையில் தீப்பிடித்து பெண் பலியானார். கோயில்பகுதியில், அரசு அல்லது தனியார் மருத்துவமனை சார்பில், முதலுதவி சிகிச்சை மையம் வைத்திருந்தால், உயிர்ப்பலி ஏற்பட்டிருப்பதை தடுத்திருக்கலாம். தற்போது, ஐயப்ப பக்தர்கள் அதிகம் வருவதால், அவர்களின் உயிர் பாதுகாப்பு கருதியாவது, சித்திரை வீதிகளில் முதலுதவி மையங்களை அமைக்க வேண்டும்.