காஞ்சிபுரம்: முக்கியமானக் கோவில்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் செயல் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,"முக்கியக் கோவில்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் எச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும். போதிய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும், என்றார்.