திருக்கோவிலூர்; மணம்பூண்டி பாலமணிகண்ட சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி ஸ்ரீ பாலமணிகண்ட சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 10:00 மணிக்கு தென்பெண்ணையில் இருந்து கலசம் புறப்பாடாகி, ஆலய வளாகத்தில் கணபதி ஹோமம், துர்கா ஹோமம், மகா சாஸ்தா ஹோமம், சடாக்ஷர ஹோமம், ஐயப்பன் மற்றும் விநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மூலவருக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாணவேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.