ஸ்ரீரங்கத்தில் மார்கழி ஒன்பதாம் நாள் வழிபாடு; வைகுந்தன் திருக்கோலத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2024 10:12
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி பாவை நோன்பின் ஒன்பதாம் நாளான இன்று பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் வைகுந்தன் திருக்கோலத்தில், தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் அருள்பாலித்தனர். உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும் என்பதே இப்பாசுரத்தின் பொருள்.