Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அண்ணாம‍லையார் மலையில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலை உச்சியில் காசி விஸ்வேஸ்வரர் கோவில்; 365 நாட்களும் கொட்டும் தீர்த்தம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மலை உச்சியில் காசி விஸ்வேஸ்வரர் கோவில்; 365 நாட்களும் கொட்டும் தீர்த்தம்!

பதிவு செய்த நாள்

24 டிச
2024
10:12

பெங்களூரில் இருந்து 70 கி.மீ., துாரத்திலும், கோலாரில் இருந்து 4 கி.மீ., துாரத்திலும் அமைந்துள்ளது அந்தரகங்கே மலை.


‘அந்தரகங்கே’ என்ற வார்த்தைக்கு கன்னடத்தில் ‘ஆழத்திலிருந்து வரும் கங்கை’ என்று பொருள். இம்மலையின் உச்சியில் காசி விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை ‘தட்சிண காசி’ அல்லது ‘தெற்கு காசி’ என்றும் அழைக்கின்றனர். இம்மலையில் பல்வேறு அளவுகளில் ஏராளமான பாறைகள், அதைச் சுற்றி இயற்கையாகவே அமைய பெற்ற குகைகள் உள்ளன. இந்த மலையின் உச்சியில் இருந்து கோலார் நகரம் முழுதையும் பார்க்கலாம். கோவிலில் பிரதான சிவலிங்கமும், பிரதான மண்டபத்தின் ஓரத்தில் நான்கு முதல் ஐந்து லிங்கங்களும் உள்ளன. இங்கு கொட்டும் நீர், சிவபெருமானின் தலையிலிருந்து விழும் புனித கங்கையும்; 365 நாட்களும் தீர்த்தம் கொட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். அந்தரகங்கேயிலிருந்து வரும் இந்த புனித நீர், மருத்துவ சிகிச்சைக்கும், நோய்கள் குணப்படுத்தும் என்று நம்பப்படுவதால், பக்தர்கள் வழக்கமாக இந்நீரை அருந்துவர் அல்லது குளிப்பர். இந்த மலை, கோவிலுக்கு மட்டுமல்ல மலையேற்றம், பாறை ஏறுதல், இரவு நேர பயணம் மற்றும் பிற சாகச நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடமாகும். இம்மலையில் பல காட்டு குரங்குகள் உள்ளன.


புராணம்: புராணங்களின்படி, இம்மலை பரசுராமர் மற்றும் ஜமதக்னியுடன் தொடர்புடையது. பரசுராமரால் கார்த்தவீர்யார்ஜுனன் கொல்லப்பட்டதும், அதை தொடர்ந்து கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்களால் ஜமதக்னி கொல்லப்பட்டதும், ரேணுகா தாமாக தீக்குளித்ததும் இந்த மலையில் தானாம். இந்த மலையில் தான் ஷத்திரிய இனத்தையே வேறுடன் அறுப்பதாக, பரசுராமர் சபதம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள குளம், பசவ (கல்லில் செதுக்கப்பட்ட காளை) வாயிலிருந்து வரும் வற்றாத நீரூற்று ‘அந்தரகங்கே’யிலிருந்து தண்ணீரை பெறுகிறது. நீரின் ஆதாரம் அல்லது அது எங்கிருந்து உருவாகிறது என்பது இன்னும் தெரியவில்லை. மழைக்காலமாக இருந்தாலும் சரி, கோடைகாலமாக இருந்தாலும் சரி, காளையின் வாயிலிருந்து தண்ணீர் பீறிட்டுக் கொண்டே இருக்கும். 


படிக்கட்டுகள்: பிரதான நுழைவாயில் வழியாக 350- – 500 படிகள் ஏற வேண்டும். இந்த படிக்கட்டுகள் ஒரேயடியாக இல்லாமல், 15 படிகள் ஏறினால், சமமான அளவில் பாதை வரும். இதுபோன்று கோவில் அடையும் வரை மாறி, மாறி இருக்கும். இதனால் ஏறுவோருக்கு கால் வலி ஏற்படாது. ஆங்காங்கே ஓய்வெடுத்துச் செல்லலாம். உச்சிப்பகுதியை அடைய, மற்றொரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு முன், இடது புறத்தில் சிவனின் மகனான முருகருக்கு சன்னிதி அமைந்துள்ளது. வள்ளி – தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார்.


செல்வது எப்படி?; பெங்களூரிலிருந்து கோலாருக்குச் செல்லும் எந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் செல்லாம். கோலார் நகரை அடைந்ததும், அந்தரகங்கேவுக்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம். இரு சக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், கார்களுக்கு, 40 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar