பதிவு செய்த நாள்
25
டிச
2024
03:12
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்க, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
கோவை மாவட்டத்தில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும், முக்தி ஸ்தலமாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், மற்றும் பிப்., 10ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் கோபுரங்கள், ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு, கோவில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. அடுத்த மாத துவக்கத்தில், பணிகள் முடிவடைய உள்ளது. பழமையான கோவில் என்பதால் இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக, தேவையான அடிப்படை வசதிகள், கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தங்கள் நடும் நிகழ்ச்சி இன்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது. சிறப்பு வேள்வி வழிபாடுகளை தொடர்ந்து, மஞ்சள் பூசப்பட்ட கம்பம் எடுத்து வரப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலில் ஈசானிய மூலையில், முகூர்த்தக்கால் நடப்பட்டது. இங்கு அமைய உள்ள யாகசாலை மண்டபத்தில், 49 வேதிகையும், 60 குண்டங்களும் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் விமலா, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.