தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், கார்த்திகையை முன்னிட்டு, நேற்று லட்சத்தீப சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி தீப ஸ்தம்பத்தின் முன் எழுந்தருளலும், தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தேர்க்கால் அருகே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வாண வேடிக்கை நடந்தது. தக்கார் ரமேஷ், எஸ்.எஸ்.எம்., மில்ஸ் குரூப் நிர்வாக இயக்குநர் வேலுச்சாமி கவுண்டர், பி.எம்.எஸ். முருகேசன் உட்பட தொழில் அதிபர்கள், உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.