வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை பால் குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2024 12:12
வடமதுரை; வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோயிலில் 28ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால்குடங்களை கொண்டு வந்த பின்னர், திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேக வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் ஐயப்பன் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது.