பதிவு செய்த நாள்
27
டிச
2024
02:12
கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னதலை கோவில் வளாகத்தில், துாய்மைப்பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்களில், ஹெத்தையம்மன் திருவிழா, அடுத்த இரண்டு வாரங்களில் துவங்குகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோத்தகிரி ஒன்னதலை கிராமத்திலும் விழா நடக்கிறது. அதில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் மைதானத்தில், காட்டு செடிகள் அதிகரித்துள்ள நிலையில், பக்தர்கள் அமர்ந்து அன்னதானத்தில் பங்கேற்க இடையூறாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கிராம மக்கள் ஒருங்கிணைந்து, காட்டு செடியை அகற்றியும், உதிர்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்தி, துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவிழாவுக்கு பக்தர்கள் நுாற்றுக்கணக்கான வாகனங்களில் வருவதால், வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், ஒருங்கே நிறுத்துவதற்கு ஏதுவாக, இடம் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.