Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ...  ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு கிராமம் தத்தெடுப்பு கிராமம் தத்தெடுப்பு ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு கிராமம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் கிடைத்த 16 சிலைகள்; மூன்றாண்டாக நீடிக்குது மர்மம்
எழுத்தின் அளவு:
காஞ்சியில் கிடைத்த 16 சிலைகள்; மூன்றாண்டாக நீடிக்குது மர்மம்

பதிவு செய்த நாள்

31 டிச
2024
10:12

காஞ்சிபுரம்; ஏகாம்பரநாதர் கோவில் நகை பாதுகாப்பு அறையில், எந்த ஆவணங்களும் இன்றி கிடைத்த 16 சிலைகள் குறித்த மர்மம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2020 அக்டோபரில் நடந்த நகை சரிபார்ப்பு பணியின்போது, கோவில் நகை அறையில், உலோகத்திலான சண்டிகேஸ்வரர், மாரியம்மன், இளையான்குடி நாயனார் உட்பட, 16 சுவாமி சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள் ஆய்வு செய்ததில், அவை பற்றிய எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. சிலைகளை புகைப்படம் எடுத்து, அவற்றின் விபரம் மற்றும் அறிக்கையை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, அப்போதைய கோவில் செயல் அலுவலர் அனுப்பி வைத்தார்.


அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிலில், 16 உலோக சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி ஆகியவை இருந்தன. தொழில்நுட்ப அலுவலர், நுண்ணறிவு தொழில்நுட்ப அலுவலர், அறநிலையத் துறை சரக ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு, எடை போட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் கோவில் நகை அறைக்குள் வந்தது குறித்து, எந்த விவரமும் அறிய முடியவில்லை. இக்கோவிலில், நீண்டகாலமாக வழிபாட்டில் உள்ள, 105 சிலைகள் மட்டுமே, தொல்பொருள் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் ஆய்வு செய்து பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆய்வு மேற்கொள்ளும் வரை, கோவிலிலேயே சிலைகள் பாதுகாப்பாக வைத்திருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலில் ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக, வெங்கட்ராமன் என்பவர் அளித்த புகாரின்படி, 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மூன்று ஆண்டுகளாகியும், விசாரணையில் எந்த முன்னேற்றும் இல்லை. இதனால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர். ‘இந்த விவகாரத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே, சிலைகள் எங்கிருந்து, யார் வாயிலாக ஏகாம்பரநாதர் கோவிலுக்குள் வந்தது குறித்து அறிந்து கொள்ள முடியும். மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையும் ஆய்வு நடத்தவில்லை’ என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவகுமாரிடம் கேட்டபோது, “ஐ.ஜி.,யிடம் இதுபற்றி கேட்டுவிட்டு பின் தெரிவிக்கிறேன்,” என்றார். சிலைகள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுபற்றி வேறு எதுவும் தெரிவிக்க இயலாது. போலீசார் கேட்கும் விபரங்களை நாங்கள் அளிக்கிறோம். – முத்துலட்சுமி, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர், காஞ்சிபுரம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் சமய சமுதாய கலை, கலாசார, பண்பாட்டு சேவை அமைப்பான ஹிந்து சமய மன்றம் ... மேலும்
 
temple news
அயோத்தி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; சனாதனத்தை வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் காஷ்மீர் வரை ராமர் திருவுருவப்படத்துடன் வடமாநில ... மேலும்
 
temple news
காரமடை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3 ம் நாள் சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar