ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு கிராமம் தத்தெடுப்பு கிராமம் தத்தெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2024 10:12
திருப்பூர்; ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், சத்யசாய் நுாற்றாண்டு விழா முன்னிட்டு தொரவலுார் கிராமம் தத்தெடுக்கப் பட்டது.
பகவான் ஸ்ரீசத்ய சாய் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் பல்வேறு சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட அமைப்பு சார்பில், தொரவலுார் கிராமம் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா, தொரவலுாரில், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கிராமம் தத்தெடுப்பு நோக்கம் மற்றும் பணிகள் குறித்து அமைப்பின் மாவட்ட தலைவர் பேசினார். அமைப்பு சார்பில் செயல்படுத்தப்படும் பால விகாஸ் எனப்படும் கல்வி சேவை நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம் குறித்து பால விகாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளக்கினர். சத்யசாய் நிறுவனத்தின் பிரேமதரு திட்டம் குறித்து மாணவர்கள் கலந்துரையாடல் நடந்தது. தொரவலுார் கிராமத்துக்கு தேவையான பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. முதல் கட்டமாக, அங்கு ஆறு கம்ப்யூட்டர்கள் வழங்கி, கிராமப் பகுதியில் ஆர்வம் உள்ளோர் கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மங்கள ஆரத்தி மற்றும் சிறப்பு நாராயண சேவை நடந்தது. ஸ்ரீசத்யசாய் அமைப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.