பதிவு செய்த நாள்
31
டிச
2024
12:12
உத்திரம்; நெருக்கடி நீங்கும்
ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025 ம் ஆண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செயல்களில் நெருக்கடி, வருமானத்தில் தடை, உடல்நிலையில் பாதிப்பு என ஏற்பட்டாலும், உழைப்பிற்கும், முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பம், தொழில், வேலை, வியாபாரம் எல்லாவற்றிலும் முழுமையான கவனம் தேவைப்படும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வாழ்வில் வளம் கூடும்.
சனி சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் கண்டச்சனியாக, உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவார். நண்பரை எதிரியாக்குவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்துவார். தாய், தந்தையரின் உடல் நிலையில் சங்கடங்களை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஸ்தானாதிபதியாக, எதிரிகளையும், போட்டியாளர்களையும் பலமிழக்க வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். உடல் பாதிப்புகளை நீக்குவார். இழுபறியாக இருந்த வழக்குகளை சாதகமாக முடிப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும், மே 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையும், பணவரவில் தடைகளும் ஏற்படும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆதாயத்தை அதிகரிப்பார். நினைத்த வேலைகளை நினைத்தபடி முடித்து ஆதாயம் காண வைப்பார்.
குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப்.11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக்.8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே11 வரை தன் பார்வைகளாலும், அதன் பின் லாப குருவாகவும், குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். வரவை அதிகரிப்பார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். வியாபாரம், தொழிலில் தடைகளை நீக்கி லாபத்தை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். திருமணம், குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் அனைத்திலும் யோகத்தை வழங்குவார். பணம், பதவி, பட்டம் என விருப்பங்களை பூர்த்தி செய்வார். வழக்கில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், உடல்நிலையில் உற்சாகம் என கனவுகளை நனவாக்குவார்.
சூரிய சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 14 - பிப். 12, மே. 15 - ஜூலை 16 காலங்களிலும், அக். 18 - நவ. 16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பிப். 13 - மார்ச். 14, ஜூன் 15 - ஆக. 16 காலங்களிலும், நவ. 17 - டிச. 15 காலத்திலும், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்குகளில் வெற்றி தருவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி வைப்பார்.
பொதுப்பலன்: உழைப்பிற்கும் முயற்சிக்கும் வெற்றி உண்டாகும். வியாபாரம், தொழிலில் தடைகள் விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என கனவு நனவாகும். தொழில் தொடங்க முயற்சித்தவர்கள் எண்ணம் நிறைவேறும்.
தொழில்: தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். வியாபாரிகள் சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், வாகனம் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். அத்தகைய தொழிலில் ஈடுபட்டிருப்போர் சிறந்த முன்னேற்றம் காண்பர்.
பணியாளர்கள்: கடந்த கால நெருக்கடி விலகும். போராட்ட நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்: மனதில் இருந்த குழப்பம் விலகும். திறமை வெளிப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவரின் அன்பு கூடும். பொன், பொருள் சேரும்.
கல்வி: ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. படிப்பில் அக்கறை அதிகரிக்கும். மேற்படிப்பு கனவு நனவாகும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த படிப்புகளில் விருப்பம் நிறைவேறும்.
உடல்நிலை: உடல் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். பரம்பரை நோய், தொற்று நோயால் ஏற்பட்ட தொல்லை விலகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.
குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சிலர் சொந்த வீடு கட்டி குடியேறுவர். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைத்து குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்: அமாவாசையன்று பிரத்தியங்கிராவை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
அஸ்தம்: வெற்றி மீது வெற்றி
புதன், சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ம் ஆண்டு முன்னேற்றமாக அமையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். சொத்து சேரும். வேலை வாய்ப்பு, புதிய தொழில் என வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொருளாதாரத்தில் உயர்வும், பொன் பொருள் சேர்கையும் ஏற்படும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கில் வெற்றியுண்டாகும்.
சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். தொழில், வியாரத்தில் போட்டியாளர்களை பலமிழக்க வைப்பார். மறைமுக எதிரிகளை மாற்றம் பெற வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவார். வழக்குகளை சாதகமாக முடித்து வைப்பார். அதிர்ஷ்ட வாய்ப்பை ஏற்படுத்துவார்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு 7ம் இடத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் குழப்பமும், தடுமாற்றமும், நட்புகளிடம் பிரச்னையும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாலினரால் தடுமாற்றம், தடமாற்றம் ஏற்படும். மே 26 முதல் ராகு 6 ம் இடத்திலும் கேது 12 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு நீங்கும். முயற்சிகள் வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும். வழக்கில் வெற்றியுண்டாகும்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர் அக்.8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் வருடத்தின் முற்பகுதியில் வியாபாரம், தொழிலில் தடைகளை நீக்கி லாபத்தை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குவார். திருமணம், குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். பணம், பதவி, பட்டம் என உங்கள் நிலையை உயர்த்துவார். வருடத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். வரவை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், உடல்நிலையில் உற்சாகம் என நன்மையளிப்பார்.
சூரிய சஞ்சாரம்: பிப். 13 - மார்ச். 14, ஜூன். 15 - ஆக. 16 காலங்களிலும், நவ. 17 - டிச. 15 காலத்திலும் சூரியன் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். சங்கடங்களில் இருந்து மீட்டெடுப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார்.
ஆதாயம் உண்டாக்குவார். வழக்குகளில் வெற்றியை ஏற்படுத்துவார். தொழில், உத்தியோகத்தில் மேன்மை தருவார்.
பொதுப்பலன்: 2025 ல் செல்வாக்கு உயரும். சங்கடம் விலகும். மேற்படிப்பு, வேலை, தொழில் மீதான எண்ணம் நிறைவேறும். வாழ்க்கையில் தெளிவான பாதை தெரியும். சொத்து சேரும். நினைத்தது நடந்தேறும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகும். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும்.
தொழில்: தொழிலில் இருந்த தடை, நெருக்கடி நீங்கும். வியாபாரிகள் சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். நிதி நிறுவனம், பைனான்ஸ், ஒப்பந்த பணி, ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், டிரான்ஸ்போர்ட், ஜவுளி, குடிநீர், விவசாயம், பப்ளிகேஷன்ஸ் தொழில்கள் முன்னேற்றம் அடையும். பத்திரம் எழுதுவோர், வழக்கறிஞர்கள் லாபமடைவர்.
பணியாளர்கள்: அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகத் தொல்லை நீங்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். மனதில் குழப்பம் தீரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும், வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கல்வி: படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது மேலும் நன்மையாகும்.
உடல்நிலை: உடல் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். 6 ம் இட சனியால் பரம்பரை நோய், தொற்று நோய் பாதிப்பு விலகும். மருத்துவச் செலவு குறைந்து ஆரோக்கியமாக நடமாடுவீர்கள்.
குடும்பம்: நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருவாய் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சிலர் சொந்த வீடு கட்டி குடியேறுவீர்கள். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட வளம் பெருகும்.
சித்திரை: வாழ்வில் முன்னேற்றம்
தைரிய, வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2025ம் ஆண்டில் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான வருடமாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை ஏற்படும். சொத்து சேரும். வேலை வாய்ப்பு, சுய தொழில் என வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். நெருக்கடி விலகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதி ராகுவாலும், பிற்பகுதி குரு, கேதுவாலும் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டபடி வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். நீண்டநாள் கனவு நனவாகும்.
சனி சஞ்சாரம்: சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு சம்ஹார சனியாக, முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாமல் செய்வார். தொழில், வியாபார போட்டியாளர்களை பலமிழக்க வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலை பாதிப்பை நீக்குவார். இழுபறியாக இருந்த வழக்குகளை சாதகமாகமாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பஞ்சமாதிபதியாக, குடும்பத்தில் இடையூறு, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, பூர்வீக சொத்தில் பிரச்னை, பிள்ளைகளால் நெருக்கடி வழங்கினாலும், அஸ்தமன, வக்கிர காலங்களான 5 மாதங்களும் இந்நிலையில் மாற்றம் இருக்கும். திசா புத்தி சாதகமாக இருப்பின் சங்கடம் நெருங்காமல் போகும்.
ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும் கேது கன்னியிலும், மே 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் ராகு யோகப் பலன்களை வழங்குவார். நினைப்பதை நடத்தி வைப்பார். கேது 12 ம் இடத்திற்கு செல்வதால் நெருக்கடி, பயத்தை போக்கி விட்டுச் செல்வார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் ராகுவும், பிற்பகுதியில் கேதுவும் நன்மைகளை வழங்குவர். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.
குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர், அக்.8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 10 வரை ஸ்தான பலத்தாலும், அதன்பின் பார்வை பலத்தாலும் வியாபாரம், தொழிலில் இருந்த தடைகளை நீக்கி லாபத்தை அதிகரிப்பார். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். பணம், பதவி, பட்டம் என உங்கள் நிலையை உயர்த்துவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் முற்பகுதியில் தன் பார்வைகளாலும், அதன்பின் ஸ்தான பலத்தாலும் நன்மை வழங்குவார். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். வரவை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், உடல்நிலையில் உற்சாகம் என முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார்.
சூரிய சஞ்சாரம்: சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பிப். 13 - மார்ச் 14, ஜூன் 15 - ஆக. 16 காலங்களிலும், நவ. 17 - டிச. 15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜன.1 - 16, மார்ச்15 - ஏப். 14, ஜூலை. 17 - செப். 16 காலங்களிலும், டிச. 16 - 31 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் தடைகளை நீக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். தொழில், உத்தியோகத்தில் ஆதாயத்தை அதிகரிப்பார். உங்கள் நிலையில் வெளிச்சத்தை வழங்கி பிரகாசிக்க வைப்பார்.
பொதுப்பலன்: செல்வாக்கு உயரும். சங்கடம் விலகும். நினைத்ததை சாதிப்பீர்கள். மேற்படிப்பு, வேலை, தொழில் மீதான எண்ணம் நிறைவேறும். விவசாயம் லாபம் தரும். வாழ்க்கையில் தெளிவான பாதை தெரியும். சொத்து சேரும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும்.
தொழில்: தொழில் முன்னேற்றமடையும். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கைக்கு வரும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்கு சந்தையில் வருவாய் உயரும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், விவசாய உற்பத்தி பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், குடிநீர், பப்ளிகேஷன்ஸ் தொழில்கள் முன்னேற்றமடையும்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகத் தொல்லை நீங்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு எதிர்பார்த்த சலுகை, உயர்வு உண்டாகும்.
பெண்கள்: கடந்தகால நெருக்கடி நீங்கும். தனித்திறமை வெளிப்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.
கல்வி: படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
உடல்நிலை: நோய், மருத்துவச் செலவு என்றிருந்த நிலை மாறும். பரம்பரை நோய், தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் கூடும்.
குடும்பம்: குடும்ப பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர். கணவன் மனைவி இருவரும் ஆலோசித்து செயல்படுவீர்கள். வருவாய் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். சிலர் சொந்த வீடு கட்டி குடியேறுவர். புதிய வாகனம், நவீன பொருள் வாங்குவீர்கள்.
பரிகாரம்: குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வழிபட நன்மை அதிகரிக்கும்.