Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 ரிஷபம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ரிஷபம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன்
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2025
மேஷம்: ஆங்கில புத்தாண்டு ராசி பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: ஆங்கில புத்தாண்டு ராசி பலன்

பதிவு செய்த நாள்

31 டிச
2024
12:12

அசுவினி; யோக காலம்


செவ்வாய், கேதுவின் அம்சம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் 2025 ஆங்கில வருடம் யோகமான வருடமாக இருக்கும். இதுவரை இருந்த நெருக்கடி இந்த வருடத்தில் இல்லாமல் போகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வெற்றியடையும். சுயதொழில் செய்பவர்களின் நிலை உயரும். வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். சிலருக்கு சொத்து சேர்க்கையுடன் பொன், பொருள் சேர்க்கை, மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கும்.


சனி சஞ்சாரம்: சனிபகவான் ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் 2025ம் ஆண்டில் தொழில் முன்னேற்றம் அடையும். நினைத்ததை எல்லாம் உங்களால் நிறைவேற்ற முடியும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.


ராகு, கேது சஞ்சாரம்: மே 25 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் நினைப்பது நடந்தேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். மே 26 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் லாப ராகுவால் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம் முன்னேற்றமடையும்.


குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப் 11 முதல் வக்ர நிவர்த்தியாவதால் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார். எதிர்ப்பில்லா நிலையை ஏற்படுத்துவார். மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்கியம், புதிய வீடு கட்டி குடியேறுதல், பூர்வீக சொத்தை அடையும் நிலை என்று அனைத்தும் சுபமாகும். அக். 8 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடத்தி வைப்பார்.


சூரிய சஞ்சாரம்: ஜன. 14 முதல் மார்ச் 14 வரையிலான காலத்திலும், ஜூன். 15 - ஜூலை. 16. மற்றும் செப்.17 - அக். 17 காலங்களிலும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். எதிர்ப்பை இல்லாமல் செய்வார். வழக்குகளை சாதகமாக்குவார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். லாபத்தை அதிகரிப்பார். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் நிலையை உயர்த்துவார். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியை வழங்குவார். எதிர்பார்த்த அனுமதிகளைக் கிடைக்க வைப்பார். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் வெற்றியளிப்பார்.


பொதுப்பலன்: 2025 ல் உங்கள் வாழ்க்கை முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். புதிய சொத்து சேரும், விரும்பிய மாற்றம் ஏற்படும்.


தொழில்: லாப ஸ்தானம் பலமடைவதால்  தொழில் முன்னேற்றமடையும். ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட இயந்திரங்கள் மீண்டும் இயங்கும். லாபம் அதிகரிக்கும். எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம் தொழில் முன்னேற்றமடையும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.


பணியாளர்கள்:  வேலையில் முன்னேற்றமில்லை. எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை என வருந்தி வந்தோரின் நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.


பெண்கள்: 2025 முன்னேற்றமான வருடமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும். வேலைப் பார்க்கும் இடத்தில் உயர்வு உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமண பாக்கியம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும்.


கல்வி:  படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர். தேர்வில்  எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


உடல்நிலை:  அச்சுறுத்திய நோய்கள் நவீன மருத்துவத்தால் விலகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் அவதிப்பட்ட நிலை மாறும். ஆரோக்கியம் சீராகும்.


குடும்பம்: குடும்பத்தில் நீடித்த பிரச்னைகள் மறையும். தம்பதி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். பொன் பொருளுடன், புதிய வாகனம், சொத்து வாங்குவீர்.


பரிகாரம் விநாயகரை வணங்கி வர வாழ்வில் வளமுண்டாகும்.


பரணி; அதிர்ஷ்ட வாய்ப்பு


செவ்வாய், சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2025 ஆங்கில வருடத்தில் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். சமூகத்தில்  அந்தஸ்து உயரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் பல வழியிலும் வரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். 


சனி சஞ்சாரம்: சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். 


ராகு, கேது சஞ்சாரம்: மே. 25 வரை கேதுவால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். நினைப்பது நடந்தேறும். வழக்கு வெற்றியாகும். மே. 26 முதல் ராகுவால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். அந்நியரால் ஆதாயம் கூடும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம் முன்னேற்றமடையும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


குரு சஞ்சாரம்: பிப்.10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப்.11 முதல் வக்ர நிவர்த்தியாவதால் உங்களுக்கிருந்த பிரச்னைகள் விலகும். வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். மே. 11 முதல் மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால், திருமண வயதினருக்கு திருமணம். புதிய வீடு கட்டி குடியேறும் நிலை, தொழிலில் முன்னேற்றம், செல்வாக்கு அதிகரிப்பு என்ற நிலை ஏற்படும். அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செல்வாக்கு உயரும்.  தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். புதிய சொத்து சேரும்.



சூரிய சஞ்சாரம்: ஜன. 14 முதல் மார்ச் 14, ஜூன் 15 - ஜூலை 16, செப்.17 - அக். 17 காலங்களில் சூரியன் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானம், லாப ஸ்தானம், முயற்சி ஸ்தானம், சத்ரு ஸ்தானம் ஆகிய இடங்களில் சஞ்சரிப்பதால், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளில் வெற்றியை வழங்குவார். எதிர்பார்ப்புகளை அடைய வைப்பார். பிரச்னைகள், போட்டிகள், வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார்.


பொதுப்பலன்: நீண்டநாள் கனவு நனவாகும். வருமானம் உயரும். கடன்கள் அடையும்.  சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும்.


தொழில்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிறிய அளவில் மேற்கொள்ளும் முயற்சியிலும் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் உதவியும் கிடைக்கும். வாகனத்தொழில்,  எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனங்கள், பைனான்ஸ், விவசாயம், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் முன்னேற்றமடையும். திரையுலகினர், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், ஆலோசகர்கள் நிலை முன்னேற்றமடையும்.


பணியாளர்கள்: தனியார் துறையில் பணியாற்றி வருபவர்களின் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். கடைநிலை ஊழியர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


பெண்கள்: வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்.  சிலருக்கு வேலையில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் செல்வாக்கு கூடும். சுய தொழில் புரிவோருக்கு வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். பொன், பொருள் சேரும். கணவரின் அன்பு அதிகரிக்கும்.


கல்வி: ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும். தேர்வில்  எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.


உடல்நிலை: நோயால் அவதிப்பட்ட நிலை மாறும். படுக்கையில் படுத்திருந்தவர்களும் எழுந்து நடமாடுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறை தீரும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் ஏற்பட்ட சிரமம் முடிவிற்கு வரும்.


குடும்பம்: தம்பதி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள். குடும்பத்தில்  நெருக்கடி விலகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பொன், பொருள் சேரும். புதிய வாகனம், சொத்து வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.


பரிகாரம் துர்கையை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.


கார்த்திகை; முயற்சியில் வெற்றி


சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1 ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.


2025 ம் ஆண்டில் கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும். நினைப்பது நடந்தேறும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு முயற்சி வெற்றியாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். வேலை தேடி வந்தவர்களின் கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.


சனி சஞ்சாரம்: கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் லாபாதிபதியாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியாகவும் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த லாபத்தை வழங்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். தொழில் மீதான அக்கறையை அதிகரிப்பார்.


ராகு, கேது சஞ்சாரம்: 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை கேதுவும், அதன்பிறகு ராகுவும் எதிர்பார்ப்புகளில் ஆதாயத்தை வழங்குவார். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்ப்பு இல்லாமல் செய்வார். வழக்கில் வெற்றி தருவார். 2,3,4 ம்  பாதத்தினருக்கு மே 25 வரை லாப ராகு வருமானத்தை அள்ளித் தருவார். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். அந்நியரால் ஆதாயத்தை வழங்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். அதன்பிறகு உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளு கூடும்.


குரு சஞ்சாரம்: பிப். 10 வரை ரிஷபத்தில் வக்ரமாக உள்ள குரு, பிப். 11 முதல் ரிஷபத்திலேயே வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கிறார். தொடர்ந்து மே. 11 முதல் மிதுன ராசிக்குள் பிரவேசிப்பவர், அக். 8 முதல் கடகத்தில் சஞ்சரிப்பார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே10 வரை பொருளாதாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதி. வழக்கில் வெற்றியை வழங்குவார். அதன்பின் திருமண வயதினருக்கு திருமணம், வீடு கட்டி குடியேறுதல், தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே10 வரை பார்வைகளால் முன்னேற்றம், திருமண யோகம், குழந்தை பாக்கியம் தருவார். மே 11 முதல் உடல்நிலையில் முன்னேற்றம். வழக்கில் வெற்றி, செல்வாக்கு, அந்தஸ்து. வேலைவாய்ப்பு, பட்டம். பதவி என உங்கள் நிலையை உயர்த்துவார்.


சூரிய சஞ்சாரம்: கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு ஜன. 14 - மார்ச் 14 காலத்திலும், ஜூன். 15 - ஜூலை 16, செப்.17 - அக். 17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப். 13 - ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ. 16 காலங்களிலும், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன்,  தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். பணப்புழக்கம் கூடும். எதிர்பார்த்த வரவு வரும். செல்வாக்கு கூடும். ஊழியர்கள் எதிர்பார்த்த மாற்றம், உயர்வை தருவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி அளிப்பார். பிரச்னைகள், போட்டிகள், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 


பொதுப்பலன்: உங்கள் நிலை உயரும். இழுபறியான வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய வாய்ப்பு தேடி வரும். அரசு வழியில் ஆதாயம், உறவினர்களால் உதவி, புதிய சொத்து சேர்க்கை. திருமண யோகம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். முயற்சிகள் வழியே எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்கள். 


தொழில்: தடைபட்ட முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் தரும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். தொழிலில் இருந்த தேக்கம் நீங்கி. விற்பனை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.


பணியாளர்கள்: பணியாளர்கள் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். என்றாலும் வேலையில் கவனமாக இருப்பதும், பிறருடைய விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மையாகும்.


பெண்கள்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு  எதிர்பார்த்த வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். குழந்தைக்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும். கணவரின் அன்பு கூடும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.


கல்வி: படிப்பில் ஆர்வம் கூடும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.


உடல்நிலை: நீண்டகால நோய்களும் இப்போது சரியாகும். படுக்கையில் படுத்திருந்தவர்களும் எழுந்து நடமாடுவர். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறை நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படும் அளவிற்கு  உடல்நிலை முன்னேற்றமடையும்.


குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என உங்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும்.


பரிகாரம் குருபகவானை வழிபட வாழ்வு வளமாகும். நன்மை நடந்தேறும்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2025 »
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை; முயற்சியில் வெற்றிசூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1 ம் பாதமான ... மேலும்
 
temple news
கார்த்திகை; உழைப்பால் உயர்வுசூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தாலும் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ... மேலும்
 
temple news
கார்த்திகை  2, 3, 4: சேமிக்கும் பழக்கம் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாகச் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar