பதிவு செய்த நாள்
30
டிச
2023
11:12
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்
செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் பொருளாதார நிலையில் இதுவரை இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகப்போகிறது. அரசு வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இனி வெற்றியடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் லாபம் என்ற நிலையை அடைய இருக்கிறீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறுவதுடன் சுயதொழில் செய்து வருபவர்கள் லாபம் காணும் காலமாக இந்த ஆண்டு இருக்கப் போகிறது. பொன் பொருள் சேர்க்கையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு என முன்னேற்றமான காலமாக இக்காலம் இருக்கும்.
சனி சஞ்சாரம்:
சனி ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் 2024ம் ஆண்டு மிகப்பெரிய யோக காலமாக இருக்கும். நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். அபரிமிதமான வருமானம் உண்டாகும். புதிய வாகனம், சொத்து சேர்க்கை ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும்.
ராகு - கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் செல்வாக்கு உயரும். எதிர்ப்பு அகலும். ஆரோக்கியம் சீராகும், வழக்குகள் வெற்றியாகும்.
குரு சஞ்சாரம்:
ஏப் 30, 2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை வாய்ப்பு, திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்கியம், புதிய வீடு கட்டி குடியேறுதல் என யாவும் சுபமாகும். மே 1, 2024 முதல் ரிஷபத்திலும், சஞ்சரிக்கும் குரு பகவான், ரிஷப சஞ்சார காலத்தில் குடும்பத்தில் முன்னேற்றத்தையும், பொன் பொருள் சேர்க்கையையும், செல்வாக்கையும் உண்டாக்குவார்.
சூரிய சஞ்சாரம்:
சூரியன் ஜன 15, - பிப் 12. பிப் 13, - மார்ச் 13. ஜூன் 15, - ஜூலை 16. செப் 17, - அக் 17 காலங்களில் உங்கள் நிலையில் உயர்வை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். அரசு வழி செயல்களில் ஆதாயத்தை வழங்குவார். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
பொதுப்பலன்:
பொருளாதார நிலை மேம்படும். சேமிப்பு உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும். சுபநிகழ்வுகள் நடந்தேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும்.
தொழில்:
தொழிலில் இருந்த தடை விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபம் அதிகரிக்கும். இயந்திரம், எலக்ட்ரானிக், பங்கு வர்த்தகம், கெமிக்கல், மெடிக்கல் தொழில்கள் முன்னேற்றம் அடையும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள்:
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே என வருந்துவோரின் நிலை மாறும். ஊதியம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும்.
பெண்கள்:
இதுவரையில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தினரிடையே உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமண பாக்கியம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும்.
கல்வி:
கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை உங்களை உயர்வடையச் செய்யும்.
உடல்நிலை:
உங்களை அச்சுறுத்திய நோய்கள் மருத்துவத்தால் விலகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்களால் உண்டான பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
குடும்பம்:
குடும்ப பிரச்னைகள் மறையும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வாகன, சொத்து சேர்க்கையும் உண்டாகும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசித்து வேண்டிவர உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்
பரணி; வெற்றி மீது வெற்றி
சுக்கிரன். செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகப் போகிறது. செல்வம், செல்வாக்கு, புதிய பொறுப்பு என உங்கள் நிலையில் மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய வாகனம், வெளிநாடு செல்லும் யோகம், திருமண வயதினருக்கு திருமணம், வேலைத்தேடியவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை, திரைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம், தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் தொடங்கி லாபம் காணும் நிலை, எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி என உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமான காலமாக இக்காலம் இருக்கும்.
சனி சஞ்சாரம்
சனி பகவான் ஆண்டு முழுவதும் லாபஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டங்களை அள்ளித் தருவார். வாழ்க்கையில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பொன் பொருள் சேர்க்கை, வாகன யோகம் என நீங்கள் விரும்பியவற்றை எல்லாம் அடைய வைப்பார்.
ராகு - கேது சஞ்சாரம்
கேதுவால் வாழ்க்கை வளமாகும். எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டுத் தொடர்புகள், முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கையுடன் வாகனச் சேர்க்கையும் உண்டாகும்.
குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஒருபக்கம் அலைச்சல் அதிகரித்தாலும் மறுபக்கம் முன்னேற்றங்களை அதிகரிப்பார். குலதெய்வ அருள் உண்டாகும். சுப காரியங்கள் நடந்தேறும். பொன், பொருள் சேரும். மே 1, 2024 முதல் தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகமான பலன்களை வாரி வழங்குவார். பொருளாதாரத் தடை விலகும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும்.உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வருமானம் பல வழியிலும் உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்
சூரியன் ஜன 15 - மார்ச் 13 ஜூன் 15 - ஜூலை 16, செப் 17 - அக் 17 காலங்களில் உங்கள் ராசிக்கு ஜீவனஸ்தானம், லாபஸ்தானம், தைரிய ஸ்தானம், சத்ரு ஸ்தானம் ஆகியவற்றில் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரத்திலும் தொழிலிலும் முன்னேற்றத்தை உண்டாக்குவார். லாபத்தை அதிகரிப்பார். பணியாளர்களின் செல்வாக்கை உயர்த்துவார். பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். எதிரிகள் விலகிச் செல்ல வைப்பார். வழக்குகள் சாதகத்தை ஏற்படுத்துவார்.
பொதுப் பலன்
செல்வாக்கு அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு பாராட்டு உண்டாகும். பணப்பற்றாக்குறை விலகும். கடன்கள் அடையும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வங்கியில் கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும்.
தொழில்
தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். வாகனத் தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பைனான்ஸ், விவசாயம், தொழில்கள் முன்னேற்றம் அடையும். திரையுலகினர், சின்னத்திரையினர், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்களின் நிலை உயரும்.
பணியாளர்கள்
தனியார்த்துறையில் பணியாற்றி வருவோரின் நிலை உயரும். சங்கடம் விலகும். எதிர்ப்பார்த்த சலுகை கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்
பெண்கள்
வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். சிலர் சுயத்தொழில் தொடங்கி வெற்றி பெறுவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் மீதான அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும்.
கல்வி
படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கூடுதல் நன்மை தரும். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடத்தில் சேர்வீர்கள்.
உடல்நிலை
உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். பரம்பரை நோய்களுக்கு சிகிச்சைகள் பெற்று குணமடைவீர்கள். படுக்கையில் இருந்து மருத்துவம் பெற்று வந்தவர்களும் இனி எழுந்து நடந்திடும் நிலை உண்டாகும்.
குடும்பம்
குடும்ப உறவுகளிடம் இருந்த சங்கடங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று பணிபுரியும் யோகம் உண்டாகும்.
பரிகாரம்
காளியை வழிபட்டுவர எதிர்ப்பு விலகும். எண்ணங்கள் நிறைவேறும்.
கார்த்திகை; உழைப்பால் உயர்வு
சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தாலும் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
ஆங்கில ஆண்டான 2024, கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகத்தை வழங்கும். முயற்சியில் வெற்றி தரும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம், பணியில் முன்னேற்றம், வேலை வாய்ப்பை உண்டாக்கும். உழைப்பால் உயர்வு காண்பீர்கள்.
சனி சஞ்சாரம்
கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியுமான சனி பகவான் ஆண்டு முழுவதும் யோகப் பலன்கள் தருவார். தொழில் உத்தியோகத்தில் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதார பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பார். வழக்கமான செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.
ராகு - கேது சஞ்சாரம்
1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகுவால் வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
குரு சஞ்சாரம்
ஏப் 30, வரை 1 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12ம் இடத்திலும், மே 1 முதல் 1ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் குரு 1ம் பாதத்தினருக்கு ஏப்.30 வரை பொருளாதார நிலையில் முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் யோகத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்துவார்.
சூரிய சஞ்சாரம்
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு ஜன 15 - மார்ச் 13, ஜூன் 15 - ஜூலை 16, செப் 17 - அக் 17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப் 13 - ஏப் 13. ஜூலை 17 - ஆக 16. அக்18 - நவ 15 காலங்களிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வழக்குகளில் இருந்து விடுதலை உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை, பதவியை வழங்குவார். அரசு பணியாளர்களின் மதிப்பை அதிகரிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலக்குவார். உடல்நிலையில் ஆரோக்கியம் ஏற்படுத்துவார். அரசால் ஏற்பட்ட நெருக்கடி மறையும்.
பொதுப்பலன்
சங்கடங்கள் விலகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் முயற்சி வெற்றியாகும்.
தொழில்
தடைகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இண்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம், சினிமா, பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பணியாளர்கள்
பணிபுரியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். இக்காலத்தில் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதால் நன்மை அதிகரிக்கும்.
பெண்கள்
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
கல்வி
படிப்பில் முழு கவனத்தை செலுத்துவதால் எதிர்ப்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்கும் வாய்ப்புண்டாகும்.
உடல்நிலை
நீண்ட நாள் நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். நடமாட்டத்தில் இருந்த பாதிப்பு நீங்கும். சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை ஆரோக்கியமடையும்.
குடும்பம்
திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.
பரிகாரம்; ஆலங்குடி குரு பகவானை வணங்க வாழ்க்கை வளமாகும்.