அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனம்; தங்க கவசத்தில் அருள் பாலித்த விநாயகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2025 11:01
திருவண்ணாமலை : ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தது. புத்தாண்டு முன்னிட்டு, கோவில், தங்க கொடிமரம் முன் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களும், வெளிநாட்டு பக்தர்களும் கூட்டமாக காத்திருந்தனர். கோவிலில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர். நீண்ட வரிசையில், பல மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.