அன்னூர் மன்னீஸ்வரர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மெகா தூய்மை பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2025 07:01
அன்னூர்; தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மெகா தூய்மைப் பணி நேற்று நடந்தது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் 25ம் ஆண்டு தேர்த் திருவிழா நாளை (3ம் தேதி) கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. வருகிற 4-ம் தேதி கொடியேற்றமும், 9ம் தேதி திருக்கல்யாணமும், வரும் 10ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்காக மெகா தூய்மை பணி நேற்று துவங்கியது. பேரூராட்சியைச் சேர்ந்த நிரந்தர, தற்காலிக பணியாளர்கள் 105 பேர் நேற்று ஓதிமலை ரோடு, தர்மர் கோவில் வீதி பகுதியில், புதர்கள் மற்றும் மண்மேடுகளை அகற்றினர். கழிவுநீர் வடிகாலை தூய்மைப்படுத்தினர். அப்பகுதியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. துப்புரவு மேற்பார்வையாளர் பிரதீப் குமார் உள்பட அலுவலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அடுத்து சத்தி ரோடு மற்றும் கடைவீதி பகுதியில் இன்று (2ம் தேதி) மெகா தூய்மை பணி நடைபெறும், என அலுவலர்கள் தெரிவித்தனர்.