பதிவு செய்த நாள்
02
ஜன
2025
01:01
உத்திரமேரூர்; சத்குரு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழாக் குழு சார்பில், சத்குரு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா, உத்திரமேரூர் இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு நாதஸ்வர இசையுடன், ஊஞ்ச விருத்தி பஜனை, பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஆகியவை பாடியவாறு, ஆராதனை செய்யப்பட்டது. முன்னதாக, காலை 8:45 மணியளவில், சத்குரு தியாகராஜ சுவாமிகளின் உருவ படமானது, உத்திரமேரூர் முத்துபிள்ளையார் கோவிலில் இருந்து, பேருந்து நிலையம் வழியாக, இரட்டைதாலீஸ்வரர் கோவிலுக்கு, நாதஸ்வர இசை முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.